Friday, April 10, 2020

Unit-1 Gender roles in society

சமுதாயத்தில் பாலினத்தின் பங்கு 
சமுதாயத்தில் பாலினத்தின் பங்கு என்பது ஒரு குறிப்பிட்ட சமூக அங்கத்தில் ஆண் அல்லது பெண்ணிடத்தில் சமூகம் எதிர்பார்க்கும் மனப்பாண்மை, பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் ஆகும். சமூக அங்கம் என்பது குடும்பம், சாதி, வர்க்கம், கலாச்சாரம் மற்றும் ஊடகம்.

குடும்பத்தில் பாலினத்தின் பங்கு 
ஒரு குடும்பத்தில் ஆணின் செயல்பாடுகள் மற்றும் பெண்ணின் செயல்பாடுகள் ஒரே விதமாக அமைவதில்லை அவரவர் பாலினத்தைப் செயல்பாடுகள் மாறுபாடு அடையும். ஒரு குடும்பமே குழந்தையின் பாலின பங்களிப்பை கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக ஆண்  குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் எத்தகைய ஆடைகள் அணிய வேண்டும் என்பதை அக்குடும்பத்தின் மூத்த அங்கத்தினர்களே தீர்மானிக்கின்றனர். மேலும் உணவு உண்ணும் முறை, விளையாடும் முறை, பழகும் முறை, மனப்பாண்மை ஆகிய அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர். இதன் அடிப்படியிலேயே ஒரு குழந்தை தன்னுடைய பாலினத்திற்கு ஏற்ப தனது மனப்பான்மையை வகுத்துக்கொள்கிறது.  

பாலினமும் சாதியும் 
சாதி என்பது இந்திய சமுதாயத்தில் நெடுங்காலமாக பின்பற்றப்படுகிறது ஆரியர்களின் வருகைக்குப்பின் தொழிலின் அடிபடையில் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும்  சூத்திரர்  என   சாதியானது  நான்கு பிரிவுகளாக இருந்தது  காலப்போக்கில் இது பல்வேறு பிரிவுகளாக பிரிந்து மக்களைப்  பிரித்தது.  இந்த சாதி அமைப்பானது மக்களுடைய கலாச்சாரத்திலும் பிரதிபலித்தது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்கள்  சார்ந்திருக்கக் கூடிய சாதியே சமூக அந்தஸ்த்தைத் தீர்மானிக்கிறது. சாதியை பொறுத்தவரை அந்தந்த சாதிகளுக்குள் பாலினம் அடங்கிப்போய்விடுகிறது. சாதி அடிப்படை சங்கங்களில் ஆண்கள் அதிகமாக தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். 

 பாலினமும் மதமும் 
இந்தியாவில் பல்வேறு வகையான மதங்கள் காணப்படுகின்றன  எல்லா மதங்களிலுமே பாலினத்திற்கு ஏற்றார்போல் பங்களிப்பு அமைந்திருக்கிறது. மதம்  சார்ந்த செயல்பாடுகளில் வீடுகளில் ஆண்களை விட பெண்களின் பங்களிப்பே  அதிகமாக  இருக்கிறது. வெளி இடங்களான வழிபாட்டுத்தலங்களில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.  மத ரீதியிலான பாலின பாகுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக இஸ்லாம் மாதத்தில் பாலின பாகுபாடு அதிகமாக் காணப்படுகிறது.

வர்க்கமும் பாலினமும் 
இந்திய சமுதாயத்தில் வர்க்கம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அவை, 1.மேல்தட்டு மக்கள், 2.நடுத்தர மக்கள், 3.அடித்தட்டு மக்கள். இந்த வர்க்க பிரிவினயானது பொருளாதார அடிப்படையில் உருவானது. மூன்று பிரிவுகளிலும் பாலின பாகுபாடு என்பது அதிகமாகவே காணப்படுகிறது. பெண்கள் வீட்டு  வேலை செய்வது குடும்பத்தை பராமரிப்பது போன்ற வேலைகளை செய்வது, வெளி இடங்களில் வேலை செய்யும் பெண்களும் பெரும்பாலும் இத்தகைய வீட்டு வேலைகளையே செய்து வருகின்றனர். ஆண்கள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது பொருள் ஈட்டுவது போன்ற வேலைகளை செய்கின்றனர். சில நேரங்களில் வர்க்க ம்=நிலைகளுக்கு ஏற்ப இது மாறுபடும். 


 பாலினமும் கலாச்சாரமும் 
கலாச்சாரம் என்பது சமுதாயத்தின் நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறிக்கிறது. குறிப்பாக பாரம்பரியம், மதம் மற்றும் சாத்திய முறைகளே கலாச்சாரத்தைத் தீர்மானிக்கின்றன. இது மனிதனின் அடிப்படை உரிமைகள், வாழ்க்கை முறை, மதிப்புகள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்தகைய கலாச்சாரத்தில் பாலின பாகுபாடு அதிகமா காணப்படுகிறது. ஆண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் பெரும்பாலும் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. ஒருசில மூடப்பழக்க வழக்கங்களும் கலாச்சாரத்தில் பாலின பாகுபாட்டை உருவாக்குகிறது. பாலினத்தை உருவாக்குவதில் கலாச்சாரத்தின் பங்கு முக்கியமான ஒன்றாகும். 

ஊடகமும் பாலினமும் 
ஊடகங்களின் முக்கியமான  பிரிவுகளான அச்சு ஊடகம் மற்றும் இயந்திர ஊடகம் ஆகிய இரண்டிலுமே பாலின பாகுபாடு அதிகமாக காணப்டுகிறது.  2018 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி ஆண்களை விட பெண்களே அதிகமாக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். சின்னத்திரை நிகழிச்சிகளில் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஊடகங்கள் பாலின பண்புகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. சில வேலைகள் பெண்களுக்கு என்றும் சில வேலைகள் ஆண்களுக்கு என்றும் ஊடகம் பாலின வார்ப்புகளி வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களை மென்மையானவர்களாகவும் ஆண்களை பலம்  மிக்கவர்களாவும் காட்டப்படுகிறது.

பிரபலமான கலாச்சாரம் 
அனைவராலும் விரும்பப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் கலாச்சாரம் பிரபலமான கலாச்சாரம் எனப்படும். உதாரணமாக வாட்ஸாப் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகளில் பதிவிடுவது இன்று அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒரு கலாச்சாரமாக திகழ்கிறது. 




3 comments:

  1. Nalla usefulla erukuthu sir.. 😊😊

    ReplyDelete
  2. Thank u sir for the tamil notes. It will be very useful to prepare for exam.

    ReplyDelete

 நம் "தமிழ்ப் புத்தாண்டு" வரலாற்றை  அறிந்து கொள்ள... சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் உறவுகளே!  தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத...